இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : November 22, 2017, 06:22
Duration : 02:06

சசிகலாவிற்கும் அதிமுக பிரமுகர்களின் பினாமி அன்புசெழியன் வீடியோ

கந்து வட்டி வசூல் மன்னன் சினிமா பைனான்சியர் அன்பு செழியன் சசிகலாவிற்கும் அதிமுக முக்கிய புள்ளிகளுக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் அன்பு செழியன். இவர் திரைப்பட துறையில் பைனான்சியராகவும், விநியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இதுமட்டும் இன்றி இவர் பெரிய நடிகர்களின் சொந்த தயாரிப்பு திரைப்படங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார். பிரபல நடிகரும் இயக்குனருமான சசிக்குமாரின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இவர் பைனாஸ் செய்துள்ளார். தமிழ் திரைப்பட துறையில் பல நிறுவங்கள் இவரிடம் பணம் பெற்று அதிக வட்டியுடன் திரும்பி கொடுத்துள்ளனர். அன்பு செழியனிடம் பணம் வாங்கியவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டி கொடுக்காவிட்டால் அவர்களை மிரட்டி கூடுதல் வட்டி வசூலித்து வந்ததாக தெரிகிறது. இவரது மிரட்டல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தால் அவர்களை உண்டு இல்லை என்று செய்யும் அளவிற்கு அரசியல் செல்வாக்கு பெற்றவர். அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் சசிக்கலா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவராம் இந்த அன்புசெழியன். கடந்த சில வருடங்களாக சினிமா பைனான் தொழிலில் கொடி கட்டி பறக்கும் அன்பு செழியன் கந்து வட்டி வசூலித்தே பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார். இவரிடம் பணம் வாங்கியவர்கள் திரும்ப கொடுக்க காலதாமதம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தினரை தூக்கி சென்று மிரட்டி பண வசூல் வேட்டையில் செய்துள்ளார். மதுரை மற்றும் சென்னையில் காவல் துறையில் இருந்து அரசியல் கட்சி வரை அதிக செல்வாக்கு பெற்ற அன்புசெழியன் சசிகலாவின் குடும்பத்தினருக்கும் அதிமுக முக்கிய புள்ளிகளின் சொத்துக்களின் பினாமியாக இருந்து வருகிறார் என்ற தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அன்புசெழியனை போலீசார் கைது செய்ய முயன்ற போது அதிமுக முக்கிய பிரமுகர்கள் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கைது செய்ய வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். ஆனாலும் அதைத்தையும் மீறி போலீசார் அன்புசெழியனை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more