By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 08:02

செயின் கொள்ளையர்கள் கைது மணலியில் பரபரப்பு....

தொடர் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்துவந்த கொள்ளையனை கண்காணிப்பு கேமெராவின் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்
சென்னை மணலி அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்தவர் சைலஜா. வீட்டின் உள்ளே வந்த நாய்களை விரட்டுவதற்காக வெளியில் வந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சைலஜாவின் தாலி செயினை பிடித்து இழுத்து 6 சவரன் செயினை பறித்து சென்றனர்.பின்னால் சென்று விரட்டியும் அவர்கள் தப்பி சென்றனர். இது குறித்து மணலி காவல் நிலையத்தில் சைலஜா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த காவல் துறையினர் சைலஜா வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமெராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணைநடத்தியத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டது பல நாட்களாக போலீசார் தேடி வந்த செயின் பறிப்பு கொள்ளையன் சூர்யா என்பது தெரியவந்தது இதை அடுத்து சிந்தாதரிப்பேட்டையில் கொள்ளையன் சூர்யா பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவனை கைது செய்தனர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா