By : Oneindia Video Tamil Team
Published : October 26, 2018, 10:43
Duration : 01:57
01:57
நீதிமன்ற தீர்ப்பு காலம் தாழ்ந்த செயல்! பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி-வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 142 கோடி மதிப்பில் மதிய அரசு நிதியில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது 18 எம் எல் ஏக்கள் வழக்கில் நீதி மன்ற தீர்ப்பு ஆச்சரியப்பட வேண்டிய எதுவுமே இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்பு காலம் தாழ்ந்த செயல்....முன்னாடியே தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை எல்லாருமே ஏற்று கொண்டு தான் ஆகணும். என்றார் குற்றாலத்தில் எம் எல் ஏ க்கள் தங்கியது புஷ்கர விழாவில் கலந்து கொண்டு பாவங்கள் போக்கும் நம்பிக்கையில் தான் தங்க வைத்தனர் என அவர்களே கூறியிருக்கிறார். என்றார் சபரிமலையில் கேரளா காவல்துறை தங்களது சீருடை மற்றவர்களுக்கு எப்படி வழங்கிது...? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். நவம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் மாதம் இறுதியில் அணைத்து பணிகளும் முடித்து போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்படும் எனவும் கூறினார்