By: Oneindia Tamil Video Team
Published : January 04, 2018, 07:07

கொள்கைன்னு கேட்டா தலைய சுத்துதுங்கறவங்க ஏன் அரசியலுக்கு வரனும்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கொள்கை என்ன என்று கேட்டால் தலையை சுற்றுகிறது என்பவர்கள் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் டிவிட்டரில் இருந்தே அரசியல் செய்ய முடியாது என கமல்ஹாசனையும் அவர் விளாசினார்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவுள்ள நடிகர் ரஜினிகாந்தையும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் கமலையும் சரமாரியாக விளாசினார்.தமிழகத்தில் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தே.மு.தி.க. போராடி வருவதாக அவர் கூறினார். தற்போது அரசியலுக்கு யாரெல்லாமோ வருகிறார்கள் என்றும் அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறுகிறார்கள் என்றும் ரஜினியை சாடினார் அவர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா