By: Oneindia Tamil Video Team
Published : December 12, 2017, 06:55

ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

நடிகர் ரஜினியின் பிறந்தநாளான இன்று அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் இன்னமும் போயஸ் கார்டன் வீட்டின் முன் குவிந்து உள்ளார்கள்.
தமிழ் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். வழக்கமாக அவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் தனது வீட்டிலோ அல்லது கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திலோ ரசிகர்களை ரஜினி சந்திப்பார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரஜினி பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்திக்கவில்லை. மேலும், அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை ரஜினி சந்தித்தார். அப்போது அரசியலுக்கு தான் வருவது குறித்து பதிலளித்த ரஜினி, போர்வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார். மேலும், சமீபத்தில் மந்த்ராலயம் சென்ற ரஜினி, தனது பிறந்தநாள் சமயத்தில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா