By : Oneindia Tamil Video Team
Published : January 06, 2018, 01:37

ரஜினி சாத்தானின் சின்னத்தை காட்டுகிறார் சீமான் அதிரடி- வீடியோ


நடிகர் ரஜினிகாந்த் தனது கையில் காட்டும் சின்னத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான். அது சாத்தான்களின் முத்திரை என்றும் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உதய சூரியனை சின்னத்தையும், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வெற்றிச்சின்னமாக இரட்டை இலையையும் கை விரல்களில் காட்டி மக்களை கவர்வார்கள். இப்போது நடிகர் ரஜினிகாந்த் பாபா முத்திரையை வெளிப்படையாக காண்பித்துள்ளார். நடிகர் ரஜினி பாபா படத்தில் வருவது போன்ற கை முத்திரையை ரசிகர்கள் முன்பாக பேசும் போதும், தனது இணையதளத்திலும் பயன்படுத்தியுள்ளார். அந்த சின்னம் சொல்வது என்ன என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

இதை அஸ்த முத்திரை, அபான முத்திரை என்றும் யோக நிபுணர்கள் கூறுகின்றனர். கை முத்திரை வடிவங்களில், இது அபான யோக முத்திரை என்றே அழைக்கப்படுகிறது. கையின் நடுவிரலை மட்டும் மடித்து கட்டை விரலுடன் இணைப்பது வாயு முத்திரை. மோதிர விரலுடன் கட்டை விரலை இணைப்பது பிருத்வி முத்திரை.
இந்த இரண்டு முத்திரைகளையும் ஒன்று இணைப்பது தான் அபான முத்திரை. அதாவது நடுவிரல் மற்றும் மோதிர விரலை மடித்து அதன் மேல் கட்டை விரல் வர வேண்டும். இதை பின்பற்றினால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம் என்பது யோக நிபுணர்களின் கருத்து.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா