By: Oneindia Tamil Video Team
Published : December 28, 2017, 03:43

என்னது..ரஜினியும் கமல் மாதிரி செய்ய போகிறாரா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கமல் பாணியில் அரசியல் கட்சிக்கான செயலி முதலில் பின்னர் 6 மாதங்களுக்கு அரசியல் குறித்து ரசிகர்கள், மக்களிடம் கருத்துக் கேட்பு இது தான் ரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பின் ரகசியம் என்று காத்து வாக்கில் செய்திகள் காதில் வந்த விழுகின்றன. டிசம்பர் 31 தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிப்பதற்கான நாளாக நடிகர் ரஜினி தேதி குறித்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா, தனிக்கட்சி தொடங்குவாரா மாட்டாரா அல்லது வேறு அரசியல் கட்சியை ஆதரிப்பாரா என்ற பல்வேறு கேள்விகளுக்கு அன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை என்னுடைய நிலைப்பாடு என்ன என்று தான் 31ம் தேதி அறிவிக்கப் போவதாக ரஜினி ரசிகர்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார். ரஜினியின் பேச்சுகளில் இந்த முறை நல்ல தெளிவு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது உங்களிடம் பேச நிறைய இருக்கிறது நிறைய பேசுவோம் என்று சஸ்பென்ஸ் வைத்துக் கொண்டே இருக்கிறார்.

இதனால் நாளுக்கு நாள் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஒருபுறம் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி அவருடைய ஜாதகம் அப்படித் தான் சொல்கிறது என்று ஜோதிட கணிப்புகளும் களைகட்டுகின்றன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா