• search
By : Oneindia Video Tamil Team
Published : January 13, 2018, 11:46
Duration : 01:24

ரஜினி கட்சியின் கொள்கை என்ன தெரியுமா ?-வீடியோ


ரஜினி கட்சியின் முக்கிய கொள்கைகளாக நதி நீர் இணைப்பு, காவிரி விவகாரம் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அதில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பிக்கும் ரஜினி அவரது கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை அறிவிக்கவில்லையே என்று விமர்சனங்கள் வந்தன.

ரஜினி கட்சிக்கு சிறப்பு நிபுணர் குழுவை வைத்து கொள்கை, திட்டங்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நதநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி விவகாரமானது தமிழகம், கர்நாடகம் இடையே பூதாகரமாக உள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புகள் வெறும் ஏட்டளவிலே உள்ளது. எனவே ரஜினி கட்சி ஆரம்பித்ததும் இந்த காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளை சந்தித்து தீர்வு காண முடிவு செய்துள்ளார்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா