By : Oneindia Tamil Video Team
Published : May 19, 2017, 03:46

நான் ஒரு பச்சை தமிழன்!! என்னை விரட்டினால் நான் எங்கு செல்வேன்? ரஜினி ஆவேசம்-வீடியோ


ரஜினி கடந்த 15-ஆம் தேதியிலிருந்து சென்னை ராகவேந்திரா மண்டபத்தில்
தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில்
அவர் பேசிய போது தான் ஒரு பச்சை தமிழன் என்றும் நான் அரசியலுக்கு
வந்தால் என தப்பு என்றும் கேட்டார். மேலும் என்னுடைய அப்பா கிருஷ்ணகிரி
நாச்சிக்குப்பதில் தான் பிறந்தார். ஆகையால் நான் ஒரு தமிழன் தான் என்றும் கூறினார்.

மேலும் என்னை நீங்கள் இங்கிருந்து விரட்டினால் நான் கர்நாடகாவிற்கு செல்ல மாட்டேன்
இமயமலைக்கு தான் செல்வேன் என்றும் கூறினார். தமிழக அரசியலில்
நிறைய அரசியல் வாதிகள் நல்லவர்கள் தான் ஆனால் அரசியல் முறை ஏதும் சரியில்லை என்றும் கூறினார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா