By: Oneindia Tamil Video Team
Published : January 20, 2018, 03:43

சிஸ்டத்தை மாத்தணும்ரஜினி

Subscribe to Oneindia Tamil

90களில் இருந்தே ரஜினியை சுற்றிக் கொண்டிருக்கிறது அரசியல். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை அவர் அதிகாரத்தில் இருக்கும்போதே துணிச்சலாக எதிர்த்தவர் ரஜினி. கடந்த ரசிகர் சந்திப்பின் போது ரஜினி 'சிஸ்டம் சரியில்லை' என்று சொன்னது இன்னமும் வைரலாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது ரஜினியின் பாட்ஷா காலத்து பேட்டி ஒன்றை இங்கே தருகிறோம்.

பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்... எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள்.அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் இந்தப் பேட்டி வெளிவந்தது.

கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ரஜினி அன்று தந்த பதில்கள் அத்தனை ஷார்ப்...

இரண்டு வாரங்கள் வெளியான பெரிய பேட்டி அது. அதன் சில முக்கிய பகுதிகள் மட்டும்:

சுஜாதா: எங்கோ பஸ் கண்டக்டராக இருந்தவரை, தமிழ்நாட்டின் ஃபோக் ஹீரோவாக உயர்த்தியது விதியா, தெய்வச் செயலா?

ரஜினி: தெய்வச் செயல்தாங்க. அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. கடவுளே எல்லாம் பாத்துப்பார்னு விட்டிருந்தா, நான் இன்னும் கண்டக்டராவே இருந்திருப்பேன். அந்த சூழ்நிலையில ஒரு பத்திரமான உத்தியோகத்தை விட்டுட்டு தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்... (சுஜாதா: 'அதுபோல இன்னொரு முயற்சி செய்தால் என்ன ஆகும் என்று வியக்கத் தோன்றுகிறது!')

சுஜாதா: அரசியல் ஈடுபாடு எப்படியிருக்கு?

ரஜினி: கொஞ்சம்கூட இல்லை. எதுக்காக அரசியல்? பணம் - புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்... இதுக்காகத்தானே? ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு பணம் புகழ் ரெண்டுமே இருக்கு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னா, இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரணும்...?

சுஜாதா: அரசியலுக்கு வந்தா உங்க கைக்கு சக்தி வாய்ந்த பதவி வருமில்லையா?

ரஜினி: தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்தமா மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா... அதுமாதிரி... எல்லாமே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. சிஸ்டம் மொத்தமா மாறினாத்தான் உண்டு.

சுஜாதா: ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்ககூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? சீக்கிரத்தில் அந்த க்ளீன் இமேஜ் மறைஞ்சு போயிடுது...

ரஜினி: ஆமாம்... எம்ஜிஆரையே எடுத்துக்கங்க... வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார்? அதுக்கப்புறம் அவராலயே ஒண்ணும் செய்ய முடியலயே...

சுஜாதா: சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லையா?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா