By: Oneindia Tamil Video Team
Published : January 06, 2018, 06:16

ரஜினி வரலாமா? வேண்டாமா?- வீடியோ

Subscribe to Oneindia Tamil

பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த் தமிழகமே ஸ்தம்பித்துப் போயிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2.57 காரணி ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவு, அரசின் எச்சரிக்கையைத் தாண்டி போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகின்றனர் தொழிற்சங்கத்தினர். நீதிமன்ற உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் ஜனவரி 8ம் தேதி தெரிவிப்போம் என்றும் தொழிற்சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களின் 30 மணி நேரத்தை கடந்து நீடிக்கும் போராட்டத்திற்கு அரசு சில மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதே சமயம் நிலைமையை பயன்படுத்திக் கொண்டு தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள் கட்டணக் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் பொதுமக்கள் அதிக காசு கொடுத்து அன்றாட பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் எப்படியாவது நிலைமையை சமாளித்துக் கொள்வார்கள் என்றாலும், இலவச பேருந்து பாஸ் பயன்படுத்தி பள்ளி சென்று வரும் மாணவ, மாணவிகளின் நிலைமை படு மோசம். பேருந்துக்காக காத்திருந்த பல மாணவர்கள் பல இருள் மங்கத்தொடங்கியதால் நடந்தே வீடுகளுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.


Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா