• search
By : Oneindia Tamil Video Team
Published : November 01, 2017, 05:10

என்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி?-வீடியோ

ரஜினிக்கு தமிழக மக்களிடையே அதிக செல்வாக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறை சர்வே முடிவு கூறுவதாக ஒரு தகவல் கிளம்பியுளளது. இது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறிகையில், "தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலை நாடே கவனித்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும், அது மக்களின் மதிப்பைப் பெற்ற ஆட்சியாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே மக்கள் மனதை அறிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அவசர கருத்துக் கணிப்பு நடத்தியது உண்மைதான்.

இந்தக் கருத்துக் கணிப்பு, மக்களின் மனதை முழுமையாக அறிந்து கொள்ள உதவும். இந்த முறை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேர் அதிமுக அரசு மீது, முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இனியொரு முறை அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதற்காக தி.மு.க., மீதும், மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையில்லை. 46 சதவீதம் பேர் மட்டுமே, தி.மு.க.,வை ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more