By: Oneindia Tamil Video Team
Published : December 15, 2017, 05:59

நல்லா பொழுது போகிறது ஆர்கே நகர் குடும்ப பெண்கள் மகிழ்ச்சி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இடைத்தேர்தலை முன்னிட்டு ஆர் கே நகர் தொகுதி காலை 9 மணியில் இருந்து இரவு வரை ஜெகஜோதியாகி உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் மேள தாள சத்தமும், விசில்கள், மைக் சத்தம் என்று ஆர்கே நகர் தொகுதி மக்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் தினமும் விருந்து படைத்து வருகின்றனர் வேட்பாளர்கள்…

வரும் 21ம் தேதி ஆர் கே நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களை தங்கள் பக்கம் வேட்பாளர்கள் தினமும் காலையிலேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் மருது கணேஷ் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதவாளக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர் கரு. நாகராஜை ஆதரித்து தமிழிசை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் மற்றும் இதர வேட்பாளர்களும் தினம் காலையில் இருந்தே பிரச்சாரத்தை தொடங்கி விடுகின்றனர். வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்லும் போது மேள தாளங்கள் விசில் சத்தம் குத்தாட்டம் என்று ஜெக ஜோதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகினர். வேட்பாளர்கள் தினமும் காலையில் இருந்தே தொகுதிக்குள் வலம் வருவதால் அப்பகுதி குடும்ப பெண்கள் தினமும் நல்ல பொழுது போவதாக கூறுகின்றனர்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா