By: Oneindia Tamil Video Team
Published : December 24, 2017, 11:45

மண்ணின் மைந்தன் மதுசூதனனுக்கு பெப்பே..வீடியோ

Subscribe to Oneindia Tamil

மண்ணின் மைந்தன் அதிமுகவின் சீனியர், ஜெயலலிதாவின் அபிமானி என்றெல்லாம் அடையாளம் காணப்பட்ட மதுசூதனனை விட மக்களின் செல்வாக்கு தொகுதியில் ஓட்டு கூட இல்லாத டிடிவி. தினகரனுக்கே என்பது வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டம் சொல்கின்றன. இதனால் வேட்பாளராக மதுசூதனனை நிறுத்த வேண்டாம் என்ற தொடக்கத்திலேயே எதிர்ப்பு காட்டிய முதல்வர் பழனிசாமி அணியின் அமைச்சர்கள் குஷியாகியுள்ளனர்.

ஆர்கே நகர் தொகுதியில் முதன்முதலில் 1991ம் ஆண்டு அதிமுகவின் வெற்றியை உறுதி செய்தவர் மதுசூதனன். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் தேர்தலில் போட்டியிடுகிறார் மதுசூதனன்.ஒரு முறை எம்எல்ஏவாக மட்டுமே இருந்த மதுசூதனன் அதன் பின்னர் கட்சியின் அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஜெயலலிதாவின் அபிமானி என்று அவர் பார்க்கப்பட்டாலும் ஏனோ 1991க்குப் பிறகு ஜெயலலிதா அவருக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பை தரவே இல்லை.

இந்நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று ஜெயலலிதா மறைவிற்குப் பின் உடைந்த போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ஓ.பிஎஸ் அணி சார்பில் தேர்தல் களத்தில் இறங்கினார். ஆனால் தேர்தல் நிறுத்தப்பட்டதோடு அப்போதும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பாரா என்பது சந்தேகமான நிலையில் தான் இருந்தது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா