• search
By : Oneindia Video Tamil Team
Published : July 24, 2018, 01:13
Duration : 01:31

கைத்துப்பாக்கியுடன் தேவாலயத்தில் மோதல்-வீடியோ

பட்டப்பகலில் கைத்துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காரில் வைத்துகொண்டு வந்து தேவாலயத்தில் மோதலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது



வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாசாலையில் வேலூர் பேராயத்தின் கட்டுபாட்டில் சி.எஸ்.ஐ தேவாலயம் உள்ளது இதில் இன்று தேவாலய வழிபாட்டுக்கு பின்னர் ஆலயத்தினுள்ளேயே பொதுகுழு கூட்டம் துவங்கியது அப்போது தேவாலய நிர்வாகிகள் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் தேவா தலைமையிலான குழுவினருக்கும் தேவாலய நிர்வாகிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர் முன் கூட்டியே மோதல் நடைபெறும் என்பதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர் மோதலை தடுக்க காவல்துறையினர் உள்ளே சென்ற போது அவர்களையும் அடிதடியில் ஈடுபட்ட கும்பல் தரக்குறைவாக பேசி காவல்துறையினரையே வெளியே செல்லும் படி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் தேர்தல் நடத்த கூடாது என தேவா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பாதிரியார் சாது சத்தியராஜை மைக்கால் தாக்கியதால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் அங்கு வந்து தேவாவின் குழுவினரை வெளியே அழைத்து வந்து தமிழக மக்கள் முன்னேற்றகழக மாவட்ட செயலாளர் தேவாவின் காரை சோதனை செய்த போது அதில் இரண்டு வீச்சறிவாள்கள் மற்றும் ஒரு பிஸ்டல் ரக கைத்துப்பாக்கியும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர் இதில் தொடர்புடைய வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தேவா,வேதானந்தம்,அன்புகிராண்ட்,ஜான்,வேதா ஆகிய 5 பேரையும் வடக்குகாவல்துறையினர் கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் பட்டப்பகலில் கைத்துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காரில் வைத்துகொண்டு வந்து தேவாலயத்தில் மோதலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பதறியடித்துகொண்டு தேவாலயத்திலிருந்து தப்பி சென்றனர் பின்னர் தேவாலயம் பூட்டப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா