By : Oneindia Video Tamil Team
Published : October 26, 2018, 11:40
Duration : 00:58
00:58
போரூர் இந்தியன் வங்கியில் ரூ.62 லட்சம் மோசடி செய்த கேசியர்-வீடியோ
போரூர் இந்தியன் வங்கியில் ரூ.62 லட்சம் மோசடி செய்த கேசியர் கைது.
போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் மானேஜர் ஜனனி போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் வங்கியில் பனி புரியும் கேசியர் சுரேஷ் ரூ.62 லட்சம் வரை பணத்தை திருடி இருப்பதாக புகார் அளித்து இருந்தார். இதுகுறித்து போரூர் இன்ஸ்பெக்டர் சீதாராமன் வழக்கு பதிவு செய்து வங்கியின் கேசியர் சுரேசிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(42), இந்தியன் வங்கியில் கேசியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ரூ.10 ஆயிரம் வீதம் எடுத்து செலவு செய்து மது குடித்து வந்துள்ளார். இதுவரை சுமார் ரூ.62 லட்சம் வரை பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது. மேலும் தற்போது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோதுதான் இவ்வளவு பெரிய தொகையை எடுத்து செலவு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.