By: Oneindia Tamil Video Team
Published : November 03, 2017, 05:42

சச்சின் கிரிக்கெட்டில் மட்டும் கடவுள் இல்லை! நிஜத்திலும் தான்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், வாகனஒட்டிகள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரளாவில் காரில் சென்று கொண்டிருந்த போது, தன்னுடைய ரசிகர்களுக்கு காரில் இருந்த படியே இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினர். திருவனந்தபுரத்தில் உள்ள முதல் அமைச்சர் அலுலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, விரைவில் தொடங்க உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து தொடருக்கு அரசின் உதவியை கோரியிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சச்சின் டெண்டுல்கர் கேரளா பிளாஸ்டர்ஸ் எனும் கால்பந்து அணியின் உரிமையாளராக இருக்கிறார். கடந்த ஆண்டும் சச்சின் டெண்டுல்கர், ஐ.எஸ்.எல். தொடர் தொடங்கும் முன், முதல் அமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசியது நினைவிருக்கலாம். 2017-2018 சீசன் ஐ.எஸ்.எல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த தொடர், 5 மாதங்கள் நடைபெற உள்ளது.

Sachin Asks Bikers, Pillion Riders To Wear Helmet

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா