By : Oneindia Video Tamil Team
Published : December 26, 2017, 11:44
Duration : 02:18
02:18
டிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்?-வீடியோ
டிடிவி தினகரனின் வெற்றிக்கு சசிகலா புஷ்பா நேரில் சந்தித்து வாழ்த்து கூறியது சசிகலா குடும்ப உறவினர்களிடையே புகைச்சலையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்பது அவர் இருந்த போதிலிருந்தே சசிகலாவின் அண்ணன், அக்காள் மகன்கள், மகள்களிடையே ஓயாத போராட்டமாக இருந்து வருகிறது. இளவரசி குடும்ப வாரிசுகளும் அரசியல் ஆசையிலும், கனவிலும் மிதந்து வரும் நிலையில் டிடிவி தினகரனின் வெற்றி சிலரால் ரசிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது.
ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று தீபா, தீபக் மல்லுக்கு நிற்க, அம்ருதாவும் கிளம்பி வந்தார். டிஎன்ஏ டெஸ்ட் கேட்டு வரும் அம்ருதாவின் வழக்கு ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இப்போது திடீரென்று கிருஷ்ணபிரியாவோ தனது வளைகாப்பு புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இதனை டிடிவி தினகரன் குடும்பத்தினர் ரசிக்கவில்லை.
இந்த நிலையில் தினகரனை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் சசிகலா புஷ்பா. இவர்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சசிகலா குடும்பத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய பேட்டியை தொலைக்காட்சிகளுக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்போது தினகரனை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி கொடுத்த டிடிவி தினகரனை, சசிகலா புஷ்பா என்னை நேரடியாக வந்து சந்தித்தார். என்னுடைய துணிச்சல் பிடித்துள்ளது. அனைத்திலும் முன்னிலை பெற்று வருகிறீர்கள். உங்களுடன் இணைந்து கட்சி வேலைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்தார். பழைய சம்பவங்களை மறந்து விட்டு மறப்போம், மன்னிப்போம் என்ற பாலிசியை கடைபிடிக்கலாம் என்று நினைக்கிறார் தினகரன்.