By : Oneindia Tamil Video Team
Published : May 15, 2018, 03:56

சாமுண்டேஸ்வரி பாதாமியில் சித்தராமையா பின்னடைவு..வீடியோ

கர்நாடக முதல்வர் சித்தராமையா பாதாமி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் சாமுண்டேஸ்வரி தொகுதியில், பின்னடைவு சந்தித்துள்ளார். முதல்வர் சித்தராமையா, மைசூர் தொகுதி சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட முதலில் தீர்மானித்தார். ஆனால் அங்கு வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டியிட்டார். இருப்பினும் காலை 8.30 மணி நிலவரப்படி, 384 வாக்குகள் வித்தியாசத்தில், பாதாமி தொகுதியில், சித்தராமையா முன்னிலை வகித்துள்ளார். இருப்பினும் எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுவது ரெட்டி சகோதரர்களின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமலு என்பதால், இழுபறி நீடிக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா