By: Oneindia Tamil Video Team
Published : April 22, 2017, 12:04

சொத்துக்காக அப்பாவையும் அக்கா மகனையும் அம்மா 'ஆசி'யுடன் கொன்ற கொலையாளி- புதுவையில் பயங்கரம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரியில் சொத்துக்காக தன் அப்பாவையும் அக்கா மகனையும் அம்மாவின் உதவியோடு கொன்ற சிவக்குமார் என்பவரை புதுவை கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரி அன்னைத் தெரசா நகரைச் சேர்ந்த சிவக்குமார் சொத்துக்காக தன் அப்பாவையும் அக்கா மகனையும் கொலை செய்ததாக பிடிபட்டுள்ளார். இதற்கு அவரது தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அன்னைத் தெரசா நகரில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது சொத்துக்களை மகள் வயிற்றுப் பேரன் பரத்குமார் பெயரில் எழுதிவைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் சிவக்குமார் தன் தாயார் வசந்தாவின் உதவியோடு அப்பாவைக் கொன்றுவிட்டு, அதன் பிறகு அக்கா மகன் பரத்குமாரையும் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சிவக்குமாரையும் வசந்தாவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடத்தில் பாமக தலைவர் ஜிகே மணி கூறியதாவது: '' தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்கும் நடவடிக்கைகல் குறித்து விவாதிக்க வேண்டும்.

பின் அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசு, பிரச்சனையைக்குத் தீர்வு சொன்ன பிறகுதான் தமிழ்நாடு திரும்ப வேண்டும்.

ஆனால்,தமிழக அரசு உள்கட்சி பிரச்சனையில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்கள் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு ஜிகே மணி கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா