• search
By : Oneindia Video Tamil Team
Published : November 28, 2017, 04:15
Duration : 02:00

ஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹாலில் மோடியுடன் இவாங்காவிற்கு டின்னர்!-வீடியோ

இந்தியா வந்துள்ள அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் இரவு உணவு சாப்பிடுகிறார், அப்போது அவரை ஆச்சரியப்படுத்துவதற்காக ராயல் வரவேற்பு, 5 விதவிதமான மெனுக்கள் என தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2017 சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் ஐதராபாத் வந்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஆலோசகராகவும் உள்ள இவாங்கா இன்ற இரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் இரவு உணவு சாப்பிடுகிறார்.

அவருக்கு அளிக்கும் வரவேற்பு, டின்னரை மறக்க முடியாத அளவில் ஆச்சரியமளிப்பவையாக மாற்ற சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய டைனிங் ஹாலான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் இவாங்கா இன்று இரவு உணவு சாப்பிடப் போகிறார்.

அவருக்கு ராயல் வரவேற்பு கொடுக்கும வகையில், அரண்மனையின் முகப்பு கேட்டில் இருந்து மலை மேல் இருக்கும் அரண்மனை வரை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட உள்ளார். அதன் பின்னர் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி மற்றும் குத்துவிளக்கேற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. அரண்மனை வாசலுக்கு இவாங்கா வந்தவுடன் ரோஜா மலர்களைத் தூவி அவரை வியக்க வைக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாம். அறை எண் 101ல் இவாங்கா டின்னர் சாப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.

122 ஆண்டு பழமையான ராஜபரம்பரையின் ஆடம்பரங்களை இந்த அறை பிரதிபலிக்குமாம். ரோஸ்வுட், சந்தன மரக்கட்டைகளால் ஆன 101 இருக்கைகள் இந்த அறையில் அமைந்துள்ளன. ஐதராபாத் ராயல்களின் விருப்பமான இடமாகவும் இந்த டைனிங் ஹால் உள்ளது. நிஜாம் மன்னரின் பிரத்யேக சேகரிப்பு பொருட்களைக் கொண்டு உணவு பரிமாறும் மேஜைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

122 ஆண்டு பழமையான ராஜபரம்பரையின் ஆடம்பரங்களை இந்த அறை பிரதிபலிக்குமாம். ரோஸ்வுட், சந்தன மரக்கட்டைகளால் ஆன 101 இருக்கைகள் இந்த அறையில் அமைந்துள்ளன. ஐதராபாத் ராயல்களின் விருப்பமான இடமாகவும் இந்த டைனிங் ஹால் உள்ளது. நிஜாம் மன்னரின் பிரத்யேக சேகரிப்பு பொருட்களைக் கொண்டு உணவு பரிமாறும் மேஜைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Follow Oneindia Tamil On

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more