• search
By : Oneindia Video Tamil Team
Published : June 12, 2018, 10:27
Duration : 00:51

சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த சப் இன்ஸ்பெக்டர்-வீடியோ

சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த சப் இன்ஸ்பெக்டரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் திவ்யாபாரதி. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் பயிற்சியில் படித்து வந்த நிலையில் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்றுள்ளார்.

தேர்வு முடித்து விட்டு வீடு திரும்பாத திவ்யாவை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் வெங்கிடாசலம் திவ்யாவை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் பகுதியில் வெங்கிடாசலம் மற்றும் அவரது முதல் மனைவி குழந்தைகளுடன் திவ்யாபாரதியும் இருந்ததை கண்டு பிடித்த போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது தனது மனைவி இரு குழந்தைகள் மற்றும் திவ்யாவை நடு ரோட்டில் நிற்கவைத்து விட்டு எஸ்ஐ வெங்கிடாசலம் தலைமறைவாகினார். தலைமறைவான வெங்கிடாசலத்தை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more