By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2018, 10:21
01:59
இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை போட்டிகள் நடைபெறும் இடங்கள் தேர்வு
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று சில அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த அடுத்த 6 போட்டிகள் மாற்றப்படுகின்றன. விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், புனே மற்றும் ராஜ்கோட் மைதானங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கூறியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன