By: Oneindia Tamil Video Team
Published : November 27, 2017, 05:38

இரட்டை இலை உதிரும்.. தமிழிசை ஜோசியம் ஒருவேளை பலிச்சிருமோ? வீடியோ

Subscribe to Oneindia Tamil

அதிமுகவில் ஆளுக்கு ஆள் ஒரு பக்கம் பேசி வருவதால் மீண்டும் பிளவு ஏற்பட்டு இரட்டை இலையாக பிரிந்து விடுவார்கள் என்று தமிழிசை சொன்ன ஜோதிடம் பலித்து விடுமோ என்று தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அமாவாசையில் இணைந்தன அதிமுக அணிகள். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது மைத்ரேயன் கருத்து. முடக்கப்பட்டிருந்த இரட்டை இலையை மீட்டு விட்டனர். ஆனாலும் கொடியேற்ற விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.

அதிமுக அணிகள் மீண்டும் பிளவு படும் என்று எதிர்கட்சியினரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறி வருகிறார். தற்போதுதான் ஒருங்கிணைந்த அணியினருக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது. ஆனால், அதற்குள் மீண்டும் பிரிந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வைத்துப்பார்த்தால் அவர்கள் இரட்டை இலையாக பிரிந்துவிடுவார்கள் என்பதையே யூகிக்க வைக்கிறது என்றார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா