By: Oneindia Tamil Video Team
Published : November 22, 2017, 05:14

கூண்டோடு தாவுறோம்..சபதம் போடும் ஓபிஎஸ் தளபதிகள்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவதற்கான போர் முரசு கொட்டப்பட்டுவிட்டது.. இரட்டை இலை சின்னம் வழக்கில் தீர்ப்பு வரும் நேரத்தில் கலகக் குரல்கள் பகிரங்கமாக வெடித்திருக்கிறது. அதிமுகவில் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் வாசித்தபோது ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் என ஒரு பட்டாளமே ஆதரவு தந்தது. ஓபிஎஸ்-ன் டெல்லி முகமாக லாபியிஸ்டாக எல்லாவற்றையும் பார்த்து கொண்டார் மைத்ரேயன்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுகள் வந்த போது தங்களுக்கு என்ன முக்கியத்துவம் கிடைக்கும் என்கிற கேள்வியை ஓபிஎஸ் தளபதிகள் வைத்தனர். ஜெயலலிதா இருந்தபோது என்ன மாதிரி கட்சி பொறுப்புகள் இருந்தனவோ அதே நிலைமை நீடிக்கும் என எடப்பாடி தரப்பு தெரிவித்தது.

ஆனால் இதை ஓபிஎஸ் தளபதிகள் ஏற்கவில்லை. கட்சியிலாவது குறைந்தபட்ச பொறுப்பு இருந்தால்தான் ஆட்சி ஓடும் வரை குதிரைசவாரி செய்ய முடியும் என கணக்குப் போட்டு இலவு காத்த கிளிகளாக இருந்தனர். ஆனால் சாதாரண ஒப்பந்தம் கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா