By : Oneindia Tamil Video Team
Published : January 05, 2018, 11:30

வருகிறது டிரம்ப் பற்றிய புயலை கிளப்பும் புத்தகம் -வீடியோ

உலகத்தையே தன்னுடைய அதிர்ச்சி டிவிட்டுக்களால் கலங்க வைத்துக் கொண்டு இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். ஆனால் டிரம்ப்பையே கலங்கடிக்க வைத்து இருக்கிறது அவரைப் பற்றி எழுதப்பட்டு இருக்கும் புத்தகம்.

'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்று புத்தகம்தான் டிரம்ப்பின் மனக்கலத்திற்கு காரணம். மைக்கேல் வுல்ப் என்ற அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம் இது.

இதில் டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது. இது அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா என்று நினைத்துக் கொண்டு இருந்த போதே டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.டிரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 200க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் மைக்கேல். டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் இவர் பேட்டி எடுத்துள்ளார். இதற்காக ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் பேட்டி எடுத்துள்ளார்.

The book on Donald Trump which is named as 'Fire and Fury: Inside the Trump White House' written by Journalist Michael Wolff has set to release today. This book has already made reasonable shaking in and out of white house. The book contains many unknown secrets about Trump, Trump Jr, Ivanka's plan to became president, Russia's help for Donald.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா