By: Oneindia Tamil Video Team
Published : January 02, 2018, 04:36

எந்த ராசிகாரர்களுக்கு எப்போது காதல் கைகூடும்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜனவரி மாதம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் எந்த நாளில் எப்படி இருக்கும் என்று பண்டிட் அனூஜ் சுக்லா டிசைன் செய்து சிறப்பான காலண்டர் வடிவமைத்துள்ளார். நம்முடைய வீடுகளில் பஞ்சாங்கம், நல்ல நேரம், பண்டிகைகளை சொல்லும் காலண்டர்களை பார்த்திருப்போம். லக்னோவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பண்டிட் அனூஜ் சுக்லா நமது ஒன் இந்தியாவிற்காக சிறப்பான காலண்டரை வடிவமைத்துள்ளார். ராசிகள், நட்சத்திரங்களின் அடிப்படையில் இந்த காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இதய சின்னம் பொறிக்கப்பட்ட நாளில் உங்கள் காதலை கூறலாம். அதே போல வீடு, வண்டி வாகனம் வாங்கலாம், பணம் வரும் நாட்களை அறிந்து கொள்ளலாம்.

காலண்டரில் இடம் பெற்றுள்ள சின்னங்களும் அதற்கான விளக்கமும்: இதயம் : இந்த நாட்களில் காதலை சொல்லலாம் மின்சாரம்: இந்த சின்னம் போட்டுள்ள நாட்களில் ஏதாவது ஆபத்து வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை. வீடு: ஜனவரி மாதத்தில் வீடு, வண்டி, வாகனம் வாங்கலாம். பராமரிப்பு செய்யலாம். சிரிப்பு பொம்மை: இந்த நாளில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். ப்ளூ ஸ்மைலி: இந்த சின்னம் போட்டுள்ள நாட்களில் உங்களுக்கு ஏதாவது சோகமான சம்பவங்கள் நடைபெறலாம். நட்சத்திரம்: இந்த சின்னம் போட்டுள்ள நாட்களில் அதிர்ஷ்டம் கூடி வரும் நாணயம்: நாணயம் சின்னம் போட்டுள்ள நாட்களில் பணம் அதிகம் வரும் வாய்ப்பு உள்ளது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா