By : Oneindia Tamil Video Team
Published : April 26, 2018, 03:33

கொள்ளையில் அதிமுக புள்ளி புதுவையில் அதிர்சி

புதுவையில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அப்போது அக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அரசு மருத்துவர் விவேக் ஆனந்த் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் துணையுடன் தான் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கொள்ளையடிக்கும் பணத்தில் பெரும் தொகையை அவருக்கு கொடுத்து வந்துள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்கு மூலம் அளித்தனர். குற்றவாளிகளின் வாக்குமூலத்தை வைத்து போலீசார் கொள்ளையில் தொடர்புடைய அதிமுக முக்கிய புள்ளியை கைது செய்ய முயற்சித்தனர். போலீசார் தேடுவதை அறிந்த பிரபல அதிமுக புள்ளி தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் கொள்ளை சம்பவத்தில் அதிமுக முக்கிய புள்ளி ஒருவர் ஈடுபட்டுள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா