• search
By : Oneindia Video Tamil Team
Published : December 07, 2017, 12:53
Duration : 01:49

ஹேக்கரிடம் கெஞ்சும் உபேர் நிறுவனம்.. திருடிய தகவல்களை பாதுகாக்க லட்சக்கணக்கில் பேரம்!-வீடியோ

சில மாதங்களுக்கு முன்பு உபேர் நிறுவனத்தின் சர்வர் மர்ம நபர் ஒருவரால் ஹேக் செய்யப்பட்டது. இதன் காரணமாக பல முக்கியமான தகவல்கள் அந்த நிறுவனத்தின் கையை விட்டு போனது.
இந்த நிலையில் தற்போது உபேர் நிறுவனம் இந்த ஹேக்கரிடம் சமரசம் பேச முடிவு செய்துள்ளது. அதன்படி அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்துள்ளது.
உலகிலேயே ஹேக்கருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தது இதுவே முதல் முறையாகும். எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, யார் அந்த ஹேக்கர் என்பது குறித்து மறைமுகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.பிரபல உபேர் நிறுவனத்தின் சர்வர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஹேக் செய்யப்பட்டது. இதன் காரணமாக 5.7 கோடி பயணிகள் குறித்த தகவலும், 6 லட்சம் ஓட்டுநர்களின் விவரங்களும் ஹேக்கர் கைக்கு சென்றது. ஒரே நாளில் 10 நிமிட இடைவெளியில் இந்த ஹேக்கிங் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒருவருடம் ஆகியும் யார் ஹேக் செய்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த ஹேக்கிங் விஷயம் சில நாட்களில் வெளியே தெரிய வந்தது. இதன் காரணமாக உலக மீடியாக்கள் அனைத்தும் உபேர் நிறுவனத்தை கிழித்து தோரணம் கட்டியது. பலரும் உபேர் வாகனங்களில் பயணிப்பதை நிறுத்தினார்கள். உபேர் நிறுவனத்தின் வருமானம் ஒரே அடியாக படுத்தது. மேலும் சிலர் உபேர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாகவும் கூறினார்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more