By : Oneindia Tamil Video Team
Published : April 25, 2018, 12:45

கலைகட்டிய போராட்டம்.... குஷியான திமுக....

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அதேபோல் விழுப்புரத்தில் பொன்முடி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றதால் திமுக தலைமையகம் குஷியாகியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா