By: Oneindia Tamil Video Team
Published : November 21, 2017, 01:19

சனிப்பெயர்ச்சி 2017-2020: புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு யோகம் யாருக்கு?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சனி பகவான் டிசம்பர் 19, மார்கழி 4 செவ்வாய் காலை 9.28 மணிக்கு
விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியை 12 ராசிக்காரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
12 ராசிக்காரர்களுக்கும் பலவித நன்மை, தீமைகள் கலந்த பலன்களே கூறப்பட்டாலும் சனி பகவானின் பார்வை படும் இடத்தைப் பொறுத்து யாருக்கு இடமாற்றம், புதிய வேலை கிடைக்கும், வெளிநாட்டு யோகம் அமையும் என்பதை பார்க்கலாம்.
இந்த பலன்கள் பொது பலன்கள்தான். ராசிக்காரர்களுக்கு நடைபெறும் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.மேஷ ராசிக்காரர்களே... இதுநாள்வரை அஷ்டமத்தில் இருந்த சனி பகவான் 9வது இடமான பாக்யதானத்திற்கு செல்கிறார். பகை கிரகமாக செவ்வாய் வீட்டில் இருந்தார். உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார். அல்லல்பட்ட நீங்கள் இனி நல்லது நடப்பதை காண்பீர்கள். மாணவர்களுக்கு 9 ஆம் இடத்து சனியால் உயர்கல்வி யோகம் தரும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல யோகம் கிடைக்கும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 3 இடம், 6வது இடம், 11வது இடத்தை பார்க்கிறார். உங்களுடைய லாப ஸ்தானத்தை 3வது பார்வையாக சனி பார்க்கிறார். மூத்த சகோதரர்கள் ஆறுதலாக இருப்பார்கள். சனிக்கிழமைகளில் செய்யும் காரியம் வெற்றி கிட்டும். மேஷ ராசிக்கு 7வது பார்வையாக 3வது ஸ்தானத்தை பார்க்கிறார். புதிய வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை தருவார். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 10வது பார்வையாக 6வது இடத்தை பார்க்கிறார். சுயமாக வேலை கிடைக்கும். நாட்டின் சூழலில் மாற்றம் இருக்கும்.மேஷ ராசி அரசியல்வாதிகளுக்கு மாற்றம் வரும்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா