By: Oneindia Tamil Video Team
Published : February 06, 2018, 01:33

காதலர் தினத்தில் பெங்களூரு மெட்ரோ மக்களுக்கு அளிக்கும் சிறப்பு பரிசு- வீடியோ

Subscribe to Oneindia Tamil


காதலர் தின பரிசாக பெங்களூர் மெட்ரோ ரயில் கூடுதலாக 3 பெட்டிகளை இணைத்து இயக்க உள்ளது. பெங்களூர் மெட்ரோ ரயில் சேவை, 'நம்ம மெட்ரோ' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 3 கோச்கள் கொண்ட ரயில்களாக இவை இயக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை ஒப்பிட்டால் பெங்களூர் மெட்ரோ ரயில் கட்டணம் சற்று குறைவாகும். அதேநேரம், பெங்களூரில் இயங்கும், நகர ஏசி பஸ்களை விட மெட்ரோவில் கட்டணம் குறைவுதான். எனவே மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் கோச்சுகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளால் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 6 கோச்கள் கொண்ட ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. கூடுதல் கோச்கள் இணைக்கப்பட்டு, சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா