By: Oneindia Tamil Video Team
Published : November 23, 2017, 04:47

கீப்பிங்ல நாங்க டோணிக்கே டஃப் கொடுப்போம்..வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரின் வித்தியாசமான கீப்பிங் ஸ்டைல் காரணமாக அனைவரும் அவரை கலாய்த்து வருகின்றனர். பிரிஸ்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. எப்போது போல இந்த வருடமும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலேயே வைரல் ஆக தொடங்கி இருக்கிறது. அதற்கு முதல் பலிகடாவாக ஆஸ்திரேலிய கீப்பர் 'டிம் பெயின்' ஆகியிருக்கிறார். இவரது மோசமான ஒரு விக்கெட் கீப்பிங் காரணமாக இங்கிலாந்து ஊடகங்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்துக்கும் இடையில் தற்போது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் டிம் பெயின் இதில் மிகவும் மோசமான விக்கெட் கீப்பிங் ஒன்றை செய்து இருக்கிறார். மிகவும் எளிதாக வந்த கேட்ச் ஒன்றை தவறவிட்டு இருக்கிறார். மேலும் அப்போது அவர் கையில் இருந்து முகம் வரை அத்தனையும் வித்தியாசமான கோணங்களில் மாறியிருக்கிறது. இது அத்தனையும் வீடியோவில் பதிவானதால் அவர் வைரல் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் இவரது கீப்பிங் குறித்து கலாய்த்து இவர் இப்படி எழுதி இருக்கிறார். அதில் ''டிம் ஒரு கைல கூட பந்தை பிடிச்சு விக்கெட் எடுப்பார்'' என்று காமெடியாக கூறியிருக்கிறார். டிம் பெயினை அணியில் இருந்து நீக்குவது குறித்து பல காலமாக ஆலோசனை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா