By: Oneindia Tamil Video Team
Published : January 04, 2018, 07:08

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகள் இவைதான்! -வீடியோ

Subscribe to Oneindia Tamil

18 பேரின் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் ஏற்பாடு நடத்த கூடாது என்றும், அவர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க கூடாது என்றும் ஹைகோர்ட் கூறியிருந்தது. ஆனால், இப்போது 18 பேரின் தொகுதிகளும் காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.1.பூந்தமல்லி, 2. பெரம்பூர், 3.திருப்போரூர்,4.சோளிங்கர்,5. குடியாத்தம்,6. ஆம்பூர்,7.பாப்பிரெட்டிப்பட்டி 8.ஆரூர்,9.நிலக்கோட்டை,10.அரவங்குறிச்சி ,11. தஞ்சாவூர்,12. மானாமதுரை,13. ஆண்டிப்பட்டி,14.பெரியகுளம் 15.சாத்தூர்,16. பரமக்குடி,17.விளாத்திகுளம்,18. ஓட்டப்பிடாரம் தற்போது தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 116 ஆக குறைந்துள்ளது. திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய முஸ்லீம் லீக் 1, சுயேட்சை 1 என சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளும் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக திடீரென தெரிவித்து அணி மாறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா