• search
By : Oneindia Tamil Video Team
Published : November 10, 2017, 11:49

அப்ப அடுத்த ஐடி ரெய்டில் சிக்கப் போவது நாம்தானா?-வீடியோ

சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான அத்தனை பேரையும் வளைத்துப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக அமைச்சர்களை உள்ளுக்குள் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. ஆனால் நிச்சயம் அடுத்த ரெய்டு ஒன்று நடந்தால் நமது வீடுகளும் சிக்கும் என்கிற கலக்கத்தில் இருக்கின்றனராம் அமைச்சர்கல்.
சசிகலா உறவினர்கள், பினாமிகள் என 190 இடங்களை நாடு முழுவதும் குறி வைத்து அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை. 2,000 அதிகாரிகள் பங்கேற்ற இமாலய ரெய்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த ரெய்டில் தினகரன், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் என எவருமே இலக்கு வைக்கப்படவில்லை. இது மிகப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரெய்டு தொடர்பாக முதல்வர் எடப்பாடியாரை அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து விவாதித்தனர். அப்போது வருமான வரி சோதனை மகிழ்ச்சி அளித்தாலும் அடுத்த ரெய்டு என ஒன்று வந்தால் நம்மை நோக்கித்தான் இருக்கும் எனவும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more