By: Oneindia Tamil Video Team
Published : December 16, 2017, 10:45

2017ஐ உலுக்கிய டாப் புகைப்படங்கள்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

2017ம் ஆண்டு ஒருபக்கம் உலகம் தொழிநுட்பத்தில் வளர்ந்து கொண்டே சென்றாலும் மற்றொரு பக்கம் போரும் கலவரமும் நடந்து கொண்டேதான் இருந்தது. இந்த மனதை உறைய வைக்கும் சம்பவங்களை விட அந்த சம்பவங்கள் குறித்த புகைப்படங்கள்தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் நடந்த கலவரத்தில் தொடங்கி லண்டனில் நடந்த தீ விபத்து வரை பல புகைப்படங்கள் உலகை உலுக்கியது. இந்த புகைப்படங்கள் 2017ல் மட்டும் இல்லாமல் வரலாற்றிலும் பல முக்கிய சான்றுகளை விட்டுச்சென்று இருக்கிறது.

மனதை பார்த்ததும் கரைய வைக்கும் இந்த புகைப்படங்கள் தான் 2017ன் மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படங்கள் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்த வருடம் முழுக்கவே ஐஎஸ் கிளிர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படைக்கும் இடையில் சண்டை நடந்து கொண்டே இருந்தது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இந்த சண்டை உக்கிரமாக நடந்தது. இந்த புகைபடத்தை 'ஒமர் சோபாணி' என்ற நபர் எடுத்து இருக்கிறார். அங்கு மசூதி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது இந்த சிறுவன் எதையும் கவனிக்காமல் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அலி அஹமது என்ற இந்த சிறுவன் பின் பாதுகாப்பு படையால் காப்பாற்றப்பட்டான்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா