By: Oneindia Tamil Video Team
Published : January 17, 2018, 02:06

தனிக்கட்சி இப்போது இல்லை... அதிமுகவை கைப்பற்றுவதே லட்சியம் TTV தினகரன்

Subscribe to Oneindia Tamil

தான் தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும் மக்கள் மன்றம் மூலமாகவும், நீதிமன்றம் மூலமாகவும் மீட்கும் திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார். ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி.டி.வி தினகரன் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி கோத்தகிரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, தனக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கு எண்ணம் அறவே இல்லை என்று தெரிவித்தார். மேலும், அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பது குறித்து தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், நீதிமன்றம் உதவியுடன் விரைவில் அதை மீட்போம் என்று தெரிவித்து உள்ளார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு இதே போல சிக்கல் எழுந்த போது, ஜெயலலிதா தனியாக வேறு சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுத்தார். அதுபோன்ற நிலையே தற்போது எங்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா