By: Oneindia Tamil Video Team
Published : December 01, 2017, 06:57

ஆத்தாடி.. இவ்வளவு நடந்தும் தினகரனுக்கு இம்புட்டு கூட்டமா??????-வீடியோ

Subscribe to Oneindia Tamil


அதிமுக உடைந்து, பிளந்து, பின்னர் இணைந்து... என்னென்னவோ நடந்து போச்சு, ஜெயலலிதா இறந்த இந்த ஒரு வருடத்திற்குள். தற்போது சசிகலா குடும்பம் ஒதுக்கி ஓரம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் ஆர்.கே.நகரில் இன்று தினகரனுக்கு கூடிய கூட்டம், அடடா இன்னுமாப்பா இவர்களை நம்ப இத்தனை பேர் உள்ளனர் என்ற ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. முதல்வர் ஈபிஎஸ் - துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கே கட்சி, கொடி,சின்னம் எல்லாம் என்று தேர்தல் ஆணையமே அதிரடியாக (??) கூறி விட்டது. தினகரன் இப்போது ஒரு சுயேச்சைதான். அவருக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது.

ஆனால் ஆர்.கே.நகரில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது கூடிய கூட்டம், கொடுக்கப்பட்ட வரவேற்பு ஆகியவற்றைப் பார்த்தபோது, அடேங்கப்பா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
அதிலும் ஒரு மகளிர் படை கையில் இலையுடன் (அதாவது அவுகளுக்குத்தான் இரட்டை இலை சொந்தமாம்) தினகரனுக்கு கூடி நின்று வரவேற்பு அளித்து தியாகத் தலைவி சின்னம்மாவின் வேட்பாளர் தினகரன் என்று முழக்கமிட்டது பார்க்க வித்தியாசமாக இருந்தது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா