By: Oneindia Tamil Video Team
Published : January 11, 2018, 04:46

செங்கோட்டையனை நாங்கள் முதல்வராக்க நினைக்கவில்லை- தினகரன் தகவல்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


கல்வியமைச்சர் கே ஏ செங்கோட்டையனை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் சார்பில் வாதிடப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டபோது, முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனாலும் செங்கோட்டையனிடம் அரசியல் பாடம் படித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் காலம் நன்றாக இருந்த காரணத்தால் அவர் முதல்வரானார்

செங்கோட்டையனுக்கு கல்வியமைச்சர் பதவியும், அதிமுக அவைத்தலைவர் பதவியும் அப்போதைக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல் முறையாக செங்கோட்டையனை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய விரும்பியதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

தமிழக அரசை கலைக்கும் நோக்கில் செயல்பட்டதாக கூறி டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏகள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டசபைத் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அதனை ரத்து செய்ய கோரி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா