• search
By : Oneindia Tamil Video Team
Published : January 05, 2018, 10:32

ரகசியம் காக்கும் டிடிவி தினரகன்- வீடியோ

ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் எங்கு செல்கிறார் என்ற விபரங்கள் உடன் இருக்கும் கார் ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கே தெரியாமல் ரகசியம் காக்கப்பட்டுவருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர் கே நகர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதில் இருந்து டிடிவி தினரகன் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். நேற்று ஆர் கே நகர் மக்களை சந்தித்து தனக்கு வாக்களித்தமைக்காக நன்றிகளை தெரிவித்தார். பின்னர் ஆர் கே நகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் தான் தினமும் எங்கு செல்கிறோம் எதற்காக செல்கிறோம் என்ற தகவல்களை உடன் இருப்பர்கள் மூலம் வெளியுகத்திற்கு தெரிவதால் அதனை தவிர்க்கும் பொருட்டு அனைத்தையும் ரகசியம் காக்க துவங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பாண்டிச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று தனது கார் ஓட்டுனரிடம் கூறிய தினகரன் காரில் ஏறி சிறிது தூரம் சென்ற உடன் மன்னார்குடிக்கு போக கூறியுள்ளார். முன்பெல்லாம் தினகரனின் பயணம் குறித்து அவரது கார் ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு முன் கூட்டியே தெரியும். ஆனால் இப்போது தினரகன் விஷயம் அனைத்தும் ரகசியம் காக்கப்படுவதாக அவரது ஆதவாளர்கள் கூறுகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more