By : Oneindia Tamil Video Team
Published : December 19, 2017, 06:29

ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெறுவாரா ? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன ?-வீடியோ

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு வாக்களிக்கப் போவதாக அதிக அளவில் வாக்காளர்கள் கூறியுள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. எந்த தேர்தலிலாவது சுயேட்சை ஜெயிச்சிருக்காங்களா? என்று செல்லூர் ராஜூ கேட்கிறார். 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மதுசூதனன் ஜெயிப்பார் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முதல்வரும், துணை முதல்வரும் மதுசூதனனை ஜெயிக்க வைக்க போராடுகின்றனர். இது என் தத்துப்பிள்ளை என்று கூறி திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவு திரட்டுகிறார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.

டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தனக்கென ஒரு பாணி வைத்துக்கொண்டு ஓட்டு சேகரிக்கும் தினகரன், குக்கர் வரைந்தால் அதற்கு தனி கவனிப்பு, பூரண கும்ப மரியாதைக்கு ஒரு கவனிப்பு என கலந்து கட்டி அடிக்கிறார். பூ தூவும் வாக்காளர்களும் தனியாக கவனிக்கப்படுகின்றனர்.

ஆர்.கே. நகரில் மகாபிரபு ஜெயிப்பார் என்று மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் வசிக்கும் ஜீன்ஸ் சித்தர் அருள் வாக்கு சொன்ன போதே டிடிவி தினகரன் புது தெம்பாக வலம் வந்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா