By: Oneindia Tamil Video Team
Published : November 14, 2017, 03:09

எப்பப் பார்த்தாலும் டென்ஷனாவே இருக்காதீங்க.. தினகரனைப் பார்த்துக் கத்துக்கங்க..!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கடந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தில் நடந்த வருமான வரி சோதனையால் அவரது குடும்பத்தினர் தலை கிறுகிறுத்து போயிருக்கும் நிலையில் டிடிவி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூலாக குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். கடந்த 9ம் தேதி சசிகலா குடும்பத்தை குறி வைத்து தமிழகத்தில் நடத்தப்பட்ட "ஸ்ரீனி வெட்ஸ் மகி" வருமானவரியின் ரெய்டு கடந்த 5 நாட்களாக களைகட்டியது. ஒரு வழியாக நேற்று மாலையுடன் இந்த திருமண ஏற்பாட்டிற்கு சுபம் கார்டு போடப்பட்டது. சோதனை முடிந்தாலும் ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ள அதிகாரிகள் சசிகலா குடும்பத்தினர், உதவியாளர்கள், தொழிலதிபர்கள் என்று சுமார் 355 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.வருமான வரி சோதனை நடந்த முதல்நாளே கூலாகத் தான் இருந்தார் தினகரன். தனது வீட்டிற்கு வருமான வரி அதிகாரி வந்து சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது மனைவி, மகளுடன் வீட்டு வாசலில் கோ பூஜை செய்தார்.வருமான வரி சோதனை நடந்த முதல்நாளே கூலாகத் தான் இருந்தார் தினகரன். தனது வீட்டிற்கு வருமான வரி அதிகாரி வந்து சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது மனைவி, மகளுடன் வீட்டு வாசலில் கோ பூஜை செய்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான கார் நிறுவனத்திடம் இருந்தே வருமான வரி சோதனைக்கான அனைத்து கார்களும் புக் செய்யப்பட்டிருக்கின்றன என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தினகரன் முன் வைத்தார்.

TTV. Dinakaran wished all childrens a happy childrens day amidst of Income tax raid storm around his family members were over yesterday evening.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா