By: Oneindia Tamil Video Team
Published : February 02, 2018, 11:38

Budget 201819,மாத சம்பளதாரர்கள் ஷாக்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு சிறு சலுகையும் கானல் நீராக மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆம். நிரந்தர கழிவு என்ற பெயரில் ரூ.40,000 அறிவித்துவிட்டு, நைசாக மெடிக்கல் செலவு மற்றும் பயணப்படி (conveyance) ஆகியவற்றை நீக்கிவிட்டது மத்திய அரசு. இதனால் மிக, மிக சொற்பமான தொகை மட்டுமே மாத சம்பளம் வாங்கும் பிரிவினருக்கு எஞ்சப்போகிறது. சலுகை கொடுப்பதை போல கொடுத்துவிட்டு, ஏற்கனவே இருந்த சலுகையை பறித்துவிட்டது மத்திய அரசு.
2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அப்போது வருமான வரி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆனால் நிலையான கழிவு (standard deduction) என்ற பெயரில் ரூ.40,000 அறிவிக்கப்பட்டது. 2006-07ம் நிதியாண்டுக்கு முன்புவரை நிலையான கழிவு என்பது நடைமுறையில் இருந்த ஒன்றுதான். அதிகபட்சமாக அப்போது ரூ.30,000 வரை நிலையான கழிவு அனுமதிக்கப்பட்டது. எனவே இதே நடைமுறை மீண்டும் வந்துள்ளதாகவே மக்கள் கருதி மகிழ்ச்சியடைந்தனர். மாத சம்பளதாரர்களுக்கு கிடைத்த ஒரே நல்ல அறிவிப்பு இதுதான் என நினைத்தனர். ஆனால், அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டனர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா