By : Oneindia Tamil Video Team
Published : November 09, 2017, 01:51

இந்தியாவினால் முதலிடத்தை பறிகொடுத்த நியூசிலாந்து- வீடியோ

இந்திய அணிக்கு எதிரான தொடரை நியூசிலாந்து அணி இழந்ததால் ட் 0 தரவரிசை பட்டியலில் அந்த அணி முதலிடத்தை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்க உள்ளது. கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் கடைசி போட்டியிலேயே தொடர் வெற்றிக்கான முடிவு தெரிந்தது.
அதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது. நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. டில்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி-20ல் நியூசிலாந்து வென்றது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்ததால் அந்த அணி டி20 தரவரிசைகளின் பட்டியலில் புள்ளிகள் இழந்து இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி தொடர்ந்து அதே ஐந்தாவது இடத்தில உள்ளது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா