By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 10:35
Duration : 01:18
01:18
சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு-வீடியோ
சோத்துப்பாறை அணையில் இருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் சோத்துப்பறை அணையில் இருந்து பெரியகுளம் சுற்று வட்டாரப் பகுதிகளான தென்கரை லட்சுமிபுரம் தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இரண்டாயிரத்து 865 ஏக்கர்களில் முதற் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.மேலும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.அத்துடன் நீர் வரத்தை பொறுத்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.