By : Oneindia Tamil Video Team
Published : December 06, 2017, 04:21

விஷாலுக்கே இந்த அக்கப் போர்னா...கமல், ரஜினியெல்லாம் வந்தா என்னாகுமோ ?-வீடியோ

நடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியதற்கே இத்தனை அக்கப்போர் நடந்துள்ளதே, அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி அரசியல் களம் காண இருக்கும் நடிகர் கமல் தேர்தலில் போட்டியிடும் சூழல் வந்தால் என்னென்ன கூத்துகள் அரங்கேறும் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆர்கே நகரில் போட்டியிடுகிறேன் என்று உரத்த குரலோடு களமிறங்கினார் நடிகர் விஷால். ஆனால் 3 நாள் தேர்தல் பரபரப்பு அவரை தலை கிறுகிறுக்க வைத்துள்ளது. என்ன நடக்குதுன்னே புரியலங்க என்று விஷாலை புலம்ப வைத்து விட்டார்கள் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள்.

எனக்கு நேர்ந்த அநியாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். வேட்பு மனுவை முன்மொழிந்தவரில் முதல் ஆளான சுமதி என்ற பெண்ணை வைத்தே விஷாலின் கண்ணை குத்த வைத்துள்ளனர். இதே போன்று தீபன் என்பவரும் பின்வாங்கியதால் தான் விஷாலின் வேட்பு மனுவிற்கு சிக்கல் வந்தது. மிரட்டப்பட்டதாக ஆடியோ ஆதாரம் உள்ளதாக சொன்ன விஷால், தேர்தல் அதிகாரி வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கும் வீடியோவும் உள்ளதாக புலம்பி வருகிறார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா