By : Oneindia Tamil Video Team
Published : May 15, 2018, 03:52

தேர்தல் எனக்கு அசால்ட்டு சித்தராமையா ; கலக்கத்தில் ராகுல் காந்தி-வீடியோ

கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் இம்முறையாவது ராகுலுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 12ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது. மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளில் இரு தொகுதிகள் தவிர மற்ற 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள‌ ஜெயாநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ்வரி தொகுதியில் போலி வாக்காளர் அட்டை சிக்கியதாலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றியை ருசிக்குமா? காங்கிரஸ் தலைவராக உள்ள ராகுல்காந்திக்கு இம்முறையாவது மகிழ்ச்சி கிடைக்குமா என அக்கட்சியினர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்பார்ப்பு பலிக்குமா இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்..

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா