• search
By : Oneindia Video Tamil Team
Published : February 21, 2019, 10:06
Duration : 01:02

திருச்சி தேவதானம் பகுதியில் நடந்த இரட்டை கொலை-வீடியோ

திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(35) மற்றும் ராஜ்குமார்(28).நண்பர்களான இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜெக நாதன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணி முடிந்து ஜெகனாதன் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பிரகாஷ்,ராஜ்குமார் இருவரும் ஜெகனாதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அங்கிருந்து ஜெகனாதன் சென்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வந்து பிரகாஷ்,ராஜ்குமாரையும் கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்கள் இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இருவரையும் கொலை செய்த ஜெகனாதன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.இக்கொலை தொடர்பாக கோட்டை காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.ராஜ்குமாருக்கு திருமணமாகாத நிலையில் பிரகாஷ்க்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர்.திருச்சி தேவதானம் பகுதியில் நடந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா