• search
By : Oneindia Video Tamil Team
Published : November 28, 2018, 10:27
Duration : 01:22

வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட 5000 ரூபாய் லஞ்சம் ,பெண் பொறியாளர் உள்பட இருவர் கைது-வீடியோ





சேலத்தில் வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு பெண் செயற் பொறியாளர் உள்பட இருவர் கைது..







சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் செயற்பொறியாளராக பணி புரிந்து வருபவர் கலைவாணி. உதவி செயற் பொறியாளராக இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று இந்த பிரிவிற்கு செயற் பொறியாளராக பணியில் அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் கட்டிட வரைபடத்திற்கு அனுமதி விண்ணப்பிபவர்கள் மற்றும் வீட்டு மனைக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பம் அளிப்பவர்களிடம் அதிக அளவு லஞ்சம் பெறுவதாக இவர் மீது குற்றசாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில் சேலம் கொண்டாலம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு என்பவர் வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெறுவதற்காக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று செயற்பொறியாளர் கலைவாணி கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க மனமில்லாத அரசு இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் அரசு தனது வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெற ஐந்தாயிரம் பணம் கொடுத்த போது, அதனை பெற்ற செயற்பொறியாளர் கலைவாணியை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கலைவாணியின் உதவியாளர் உஸ்மான் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் இருவரிடமும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து சென்றனர்.வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைதான சம்பவம் சேலம் மாநகராட்சி அலுவலக வாளகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more