• search
By : Oneindia Video Tamil Team
Published : August 17, 2018, 10:21
Duration : 02:55

முந்திரி பருப்பு தயாரிப்பு ..பெண்கள் குமுறல்- வீடியோ

புதுக்கோட்டை ஆதனக்கோட்டையில் கையில் ஏற்படும் காயங்களைக்கூட பொருட்படுத்தாமல் பரம்பரை பரம்பரையாக முந்திரி தொழிலை விடாமல் செய்துவரும் பெண்கள் சுவாரஸ்ய தகவல்…..

புதுக்கோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதுக்’கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையான ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் முந்திரி தயரிக்கும் தொழில் செய்துவருகின்றனர்.இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, கந்தர்வக்கோட்டை,அரிமளம், திருவறங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25ஆயிர் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலும் முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. இதில் விலையும் முந்திரிகொட்டைகளை 1 மூட்டை 10 ஆயித்து 500 ருபாக்கு வாங்கி அதனை வருத்தெடுத்து முந்திரி பருப்புகளை பிரித்தெடுத்து விர்பனைசெய்துவருகின்றனர் இவர்கள் குடிசை தொழிலாக பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்துவருகின்றனர்.இந்த முந்திரி பருப்பை பிரித்தெடுக்கும் தொழிலை பெரும்பாலும் பெண்கள்தான் வேலை செய்கின்றனர்.அந்த முந்திரிகொட்டையை முதலில் ஒரு மண்சட்டியில் ஒவ்வொரு கிலோவாக போட்டு அதனை நெருப்பில் அறைமணிநேரம் வருத்தெடுத்து பின்னர்அதனை சூட்டோடு சூடாக உடைத்து அதில்உள்ள முந்திரி பருப்புகளை எடுப்பார்கள் அப்போது வருத்தெடுத்து கொட்டும்போது அதில் வடியும் எண்ணைகள் பெண்கள் கையில் பட்டு அது கை விரல்களில் தோல் உரிவு ஏற்பட்டும் காயங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. அதனை தாங்கும் விதமாக அருகில் சாம்பலை தடவிகொண்டுதான் மீண்டும் அந்த முந்திரி கொட்டைகளை உடைத்து முந்திரிபருப்பை எடுப்பார்கள் இதனை இரவு பகல் என பாராமல் பெண்கள் வேலைப்பார்த்து வருகின்றனர்; இதுபோன்று ஒரு கிலோவிற்கு 20ருபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மற்றபகுதிகளில் இயந்திரங்களில் தயாராகும் முந்திரி பருப்புகளைவிட இங்கு குடிசைத்தொழில் மூலம் தயாரிக்கபடும் முந்திரி பருப்புகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகம் என்றும் தெரிவித்தனர். உடைத்தெடுத்த பின்னர் அதனை வெயிலில் உலரவைத்து தோல் உரித்து பின்னர் விற்பனை செய்வார்கள் ஒரு மூட்டை 10 ஆயித்து 500 ருபாய்கு வாங்கி அதனை பின்னர் முந்திரிபருப்புக்களை 9 ஆயிரத்துக்குதான் விற்பனை செய்ய முடிகிறது என்று தெரிவிக்கின்றனர் அதிக லாபமும் இல்லாமல் அதிக நட்டமும் இல்லாமல் தான் இந்த தொழில் நடக்கிறது.இந்த முந்திரிபருப்பினை பரம்பரையாக பார்த்த இந்ததொழிலை மரியாதையோடு மீண்டும் நாங்கள் செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர். போதிய பணம் இல்லாததால் ஒரு மூட்டை மட்டும்தான் வாங்க முடிகிறது இதற்கு அரசாங்கம் வங்கிமூலம் கடன் உதவிசெய்தால் நாங்கள் மூன்று மூட்டைகள் வரை வாங்கிதொழில் செய்து நல்ல லாபம்பெறமுடியும் அதோடு வெளியூர் வெளிமாநிலம் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more